Saturday, April 21, 2018

நெஞ்சு பொறுக்குதில்லையே ஆஷிஃபா. !!!
நெஞ்சு பொறுக்குதில்லையே
இப்பிஞ்சுக் குழந்தைக்கு நிகழ்ந்த
வன்கொடுமையை நினைக்கையில்
நெஞ்சு பொறுக்குதில்லையே

Monday, April 16, 2018

யார் அந்தத் தீவிரவாதி.!?

இயல்பாகவே தீவிரவாதி என்கிற சொல்லைக் கேட்டாலே நமக்கு ஒருவித அச்சமும்,அதிர்ச்சியும் மனதில் ஏற்படுகிறது. ஏனென்றால் இந்த சொல் ஒரு பயங்கர குற்றம் செய்பவர்கள் போன்று நம் எண்ணங்களில் ஆழமாக பதிந்து விட்டது. அதுவும் இப்போதைய காலகட்டத்தில் இந்த சொல்லை நாம் அடிக்கடி பத்திரிகைச் செய்திகளிலும்,காணொளிச் செய்திகளிலும் சமூக வலைதளச் செய்திகளிலும் காணமுடிகிறது.

Wednesday, April 11, 2018

ஆரோக்கிய வாழ்விற்கு அவசியம் தேவை உடற்பயிற்சி.!!!

நாம் உயிர் வாழ உணவு எந்த அளவுக்கு முக்கியமோ அதுபோல நமது உடல் உறுதியுடனும்,வலிமையுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்க உடற்பயிற்சி மிக அவசியமாக இருக்கிறது. நவீன இயந்திரங்களும் சாதனங்களும் கண்டுபிடிக்குமுன் மனிதன்  உடல் உழைப்பைத்தான் அதிகமாக ஈடுபடுத்திக் கொள்ளும்படி இருந்தது.

Monday, April 9, 2018

விஷ ஜந்துக்கள் ஜாக்கிரதை.! அதற்க்கு என்ன செய்யலாம்.!?

கோடை வெயில் அகோர முகம் கொண்டு கொளுத்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நாட்டில் தண்ணீர்ப் பஞ்சம் ஒருபுறமிருக்க மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும்  விஷ ஜந்துக்களுக்கும் பயந்து வாழவேண்டி உள்ளது.

Wednesday, April 4, 2018

கலவரம்.!

நாளெல்லாம் பட்டினியாய்
நகரெல்லாம் தீக்கிரையாய்
பாவிகளின் வன்செயலால்
பாரெல்லாம் கலவரமாய்

Thursday, March 29, 2018

மனித நேயத்தில் மருத்துவர்களின் பங்கு.!

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று ஒரு பழமொழி நம் முன்னோர்கள் சொல்வார்கள்.ஒரு மனிதன் எவ்வளவுதான் பணம் பொருள் செல்வம் வசதி வாய்ப்பைப் பெற்றிருந்தாலும் சீக்கு பிணி இல்லாத வாழ்க்கையே சிறந்த வாழ்க்கையாகும்.

Saturday, March 17, 2018

சொந்த பந்தம்.

சொந்தபந்தம் என்பது இறைவன் இவ்வுலக வாழ்வில் நமக்கு வழங்கிய பெரும்பாக்கியமாகும். மனித வாழ்வில் மிக அவசியமான நம்முடன் பின்னிப் பிணைந்து சங்கிலித் தொடராய் வந்து கொண்டிருக்கும் உறவாகும்.நம் பிறவி தந்தை என்ற உறவின் மூலமாக தாய் என்ற உறவை தாங்கிப் பிடித்துக் கொண்டுதான் இவ்வுலகை கண்டோம். மனிதர்கள் இவ்வுலகில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து தனது வாழ்வு முடியும் வரை ஏதாவது ஒருவகை சொந்த  பந்தங்களை சார்ந்தே வாழ்ந்து வருகின்றனர். அதுவே உலக நியதி.

Monday, March 5, 2018

யார் ஏழை .!?

ஓலைக் குடிசையாயினும்
உனதென்று சொந்தமாய்
ஒருவேளைக் கஞ்சி குடித்து
நிம்மதிப் பெருமூச்சில் 
நெஞ்சு நிமிர்த்தி நடக்கும்
நீயா ஏழை

Saturday, March 3, 2018

புரையோடிக்கொண்டிருக்கும் பாலியல் கேவலங்கள்.!

ஒருபுறம் கல்வியறியும் நாகரீகமும் நவீனமும் முன்னேறி பெருகிக்கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் இன்னொருபுறம்  பெண்கள் சிறுமியர்கள் மீதான பலாத்காரமும் பாலியல் கேவலமும் பெருகிக்கொண்டு போவதுதான் பரிதாப நிலையாக உள்ளது. அதிலும் சில சம்பவங்கள் நாம் கேள்விப்படும் போது ஜீராணிக்கவே முடியவில்லை. மனசாட்சியே இல்லாமல் சிறுமியென்றும் பாராமல் கூட்டு பாலியல் பலாத்காரம்  கொஞ்சம்கூட ஐயப்பாடு இல்லாமல் கொடூரமான முறையில் நடப்பதை நினைத்தால் இம்மனித நாகரீகம்  பல வருடத்திற்கு பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.

Thursday, March 1, 2018

என்னமோ நடக்குது மர்மமா இருக்குது.!!!

நாம் ஒவ்வொரு மனிதனும் இப்புவியில்தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்புவியில் சிலர் ஏழைக் குடும்பத்தில் பிறந்திருப்பர். சிலர் நடுத்தர குடும்பத்தில் பிறந்திருப்பர். இன்னும் சிலர் பெரும் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்திருப்பர். பிறவி எப்படி இருந்தாலும் அவரவர் வசதி வாய்ப்புக்குத் தகுந்தவாறு தன் தேவைகளை பூர்த்தி செய்துகொண்டு வாழ்க்கையை அமைத்துக் கொண்டு அவரவர் தரப்பில் மகிழ்வோடு தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.இதில் யாதொரு சந்தேகமும் இல்லை.

Monday, December 14, 2015

காசிருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா..!?!?


காசைக் கடவுளுடன் ஒப்பிட்டு பேசும் அளவுக்கு காசு பணம் மிக அத்தியாவசியமானதுடன் இன்றைய காலகட்டத்தில் இவ்வுலகில் காசிருந்தால் எதையும் வாங்கிவிடலாம் என்ற எண்ணமும் மேலோங்கிக் கொண்டிருக்கிறது.மனிதன் மானத்துடனும் சுயமரியாதையுடனும் கௌரவத்துடனும் வறுமை இல்லாமலும் வாழ்வதற்கு காசு பணம் மிக மிக முக்கியமானதாகும்.மறுப்பதற்கில்லை.அதேசமயம் நாகரீகமும்

Thursday, November 19, 2015

ஊருக்கு மட்டும்தான் உபதேசமா.!?


பெரும்பாலும் நமதூர் பகுதிகளில் நாம் அனுதினமும் ஒருசிலரை பார்த்திருப்போம். வாய் ஓயாமல் அடுத்தார்களுக்கு ஏதாவது ஒரு உபதேசம் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.உபதேசம் செய்வது ஒருவகையில் நல்ல விஷயம்தான்.மறுப்பதற்கில்லை. அதேசமயம் யாரொருவர் பிறருக்கு உபதேசம் செய்கிறார்களோ அந்த நபரும் ஓரளவுக்கு அவ்விசயத்தில் சரியாக கடைப்பிடித்து நடப்பவர்களாக இருக்கவேண்டும்.தாம் அந்த விசயத்தில் சரியாக இல்லாமல் அடுத்தவர்களுக்கு மட்டும் உபதேசம் செய்வாராயின் அதை யாரும் பெரும்பொருட்டாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள்.அவரை யாரும் மதிக்கமாட்டார்கள். மேலும் பல இழிவுச்சொல்லுக்கே ஆளாவார்கள்.

Sunday, November 15, 2015

புறம்பேசுதல் நல்ல பழக்கமாகுமா.!?


அதாவது அடுத்தவன் குறை காண்பவன் அரை மனிதன் தன் குறை உணர்பவன் முழுமனிதன் என்று ஒரு பழமொழி சொல்வார்கள் இப்பழமொழி பெரும்பாலும் புறம்பேசும் மனிதர்களுக்கே மிகப் பொருத்தமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

Thursday, November 5, 2015

அறிவுக்குப் புலப்படாத ஆழ்கடலே.!


அறிவுக்குப் புலப்படாத ஆழ்கடலே
உன் விரிவுக்கு நிகராக யாதுமுண்டோ
மொத்தநீரையும் உனதுள்ளடக்கி - உலகின்
மூன்றில் இருபங்கை உனதாக்கி
நித்தமும் நீ எழுப்பும் ஓசையினால்
நெஞ்சம் கனத்திடும் நெகிழ்ச்சியிலே

Saturday, October 24, 2015

கொடுப்பினை வேண்டும் குழந்தை பாக்கியத்திற்கு !!!


ஒருமனிதனுக்கு பாக்கியத்திலும் பெரும்பாக்கியம் என்று சொன்னால் அது குழந்தைபாக்கியமாகத்தான் இருக்கமுடியும். குழந்தைபாக்கியம் பெற்றிருந்தால்தான் இவ்வுலக மக்கள் ஒரு ஆணையும்,பெண்ணையும் முழுமையான அடையாளமாக பார்க்கிறார்கள். எத்தனை கோடி செல்வத்திற்கு அதிபதியாக இருந்தாலும் என்னதான் பலவசதிகளைப் பெற்றிருந்தாலும் குழந்தை பாக்கியமில்லாதோர் வாழ்வில் மனதார மகிழ்ச்சியோ சந்தோசமோ இருக்க வாய்ப்பில்லை.

Monday, October 5, 2015

ஆண்டவனே ஆள்பவனே !!!


விண்ணையும் மண்ணையும் படைத்திட்டு
விதியையும் மதியையும் கொடுத்திட்டு
தன்னிலை உணர்ந்திட சோதனைகள்
தரமான வாழ்வுக்குப் போதனைகள்
தந்திட்ட ஆண்டவன் சிறப்பன்றோ
தரமாக்கி வாழ்தல் நலமன்றோ

Wednesday, September 30, 2015

சரியான இளிச்சவாயெனா இருக்கியேப்பா.!?


நாம் அன்றாடம் எத்தனையோ வித்தியாசமான குணமுடைய நபர்களை சந்திக்கிறோம்.அதில் ஒன்றுமறியாத வெகுளித்தனமான வெளுத்ததெல்லாம் பாலென நினைக்கும் நபர்களும் அடங்கும். இப்படிப்பட்ட வெகுளித்தனமான நபர்கள் எதையும் யோசிக்காமல் யாரையும் எளிதில் நம்பி விடுவார்கள்.எது போலி எது நிஜம் என்று தெரியாமல் ஏமாந்தும் போய்விடுவார்கள். புறத்தோற்றத்தை வைத்து மரியாதைக்குரியவர்கள் என நினைத்து விடுவார்கள்.கள்ளம்கபட மற்ற மனதாக குழந்தைகள் போல நடந்து கொள்வார்கள். இத்தகைய ஒன்றும் அறியாத அப்பாவிகளுக்கு சமுதாயம் சூட்டியுள்ள பட்டம்தான் இழிச்சவாயென் என்பதாகும்.

Sunday, September 20, 2015

ஹலோ...ஹலோ... நலமா.!?


நாம் தினம் தினம் அன்றாடம் வாழ்வில் சந்திக்கும் நபர்களை முதல் விசாரிப்பாக எப்படி இருக்கீங்க நலமா.? என கேட்டறிகிறோம். பதிலுக்கு நாம் விசாரிக்கும் நபர் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க என்றோ அல்லது இரண்டு நாளா ஜுரம்ங்க தலைவலி உடம்புக்கு சரியில்லை அதான் வெளியே வரலே என்று உடல் உபாதையை சொல்லி அழுத்துக் கொள்வதும் உண்டு

Wednesday, September 9, 2015

ஆளும் வளரனும் அறிவும் வளரனும் !!!


ஆள் வளந்த அளவுக்கு இன்னும் அறிவு வளரவில்லை என்று இந்த சொல்லை நாம் நமது ஊர்களில் வசிப்பிடங்களில் பெரியோர்கள் பிறருக்கு புத்திமதி சொல்லும்போது காதில் கேட்டிருப்போம். அதாவது சாதாரணமாக சிலகாரியங்களை செய்யும்போது யோசிக்காமல் தவறுதலாக செய்து விடுவது அல்லது ஒரு செயலின் பின்விளைவுகளை நினைத்துப் பார்க்காமல் செய்துவிட்டு பிறகு வருத்தப்படுவது இதுபோன்ற அறிவைப் பயன்படுத்தாமல் செய்யும் தவறுகளை செய்பவர்களிடத்தில் தான் பெரும்பாலும் இந்த வார்த்தையை உபயோகிப்பார்கள்.

Saturday, August 29, 2015

ஹாபிட் (HABIT) என்கின்ற பழக்கம் நல்ல பழக்கமா..???

பொதுவாகவே அநேகமானோர் ஏதாவது ஒருவகையில் ஹாபிட்[ HABIT ] என்கின்ற பழக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதாவது எதில் ஒருவர் அதிக கவனம் செலுத்தி அதிக நாட்டம் கொண்டு நடந்து கொள்கிறார்களோ அதுவே நாளடைவில் அவர்களுக்கு ஹாபிட் என்று சொல்லக்கூடிய பழக்கமாகி விடுகிறது.